Clicky

மண்ணில் 11 MAY 1924
விண்ணில் 17 MAY 2022
அமரர் சின்னக்கிளி சண்முகம் 1924 - 2022 யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அன்பு ஆசையாவே....! சிறிய தந்தையும் அப்பாவிற்கு இலக்கணமே என உணரவைத்து அன்பை தந்தீர்களே ஆசையா.. துயரம் நான் இதை கேட்காமல் கொடுத்துவிட்டீர்களே! சின்னா! சின்னா! என அழைப்பீர்களே - இனி யார் எனை அழைப்பார்கள் சின்னா என்று ? தோழன் எனக்கூறி தோல்விகளை ஜெயித்திட தோள் கொடுத்தீர்களே ஆசையா.... எத்துன்பம் வந்தாலும் அழுதிடக்கூடாதென்று அறிவுரை கூறுவீர்கள் - அழுகையை நீங்கள் தந்து போனீர்களே ஆசையா.... மருமகளாய் நினைக்காது "பிள்ளை" "பிள்ளை" என அழைத்து உங்கள் பிள்ளை போலவே இன்றுவரை வழிநடத்திய ஆசையாவே.... தூரத்தில் இருந்தாலும் உங்கள் நேசத்தில் வாழ்ந்தோம் அப்பப்பா.... -இனி ஆசையோடு நாம் யாரை அழைப்போம் அப்பப்பா என்று.....! உறங்கிட நேரமின்றி உழைத்திடும் கண்களே! - தற்போது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றீர்களே ! நம்மை தவிக்கவிட்டு.... நீங்கள் இயற்கையுடன் கலந்தாலும் எங்கள் அனைவரது இதயத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள்!!! இருப்பீர்கள்!!!!! பெறாமகன் பாலச்சந்திரன்(தர்மராஜா) மருமகள் தமயந்தி பேரப்பிள்ளைகள் அனு , அபி
Write Tribute

Tributes