
திதி:13/09/2025
யாழ். மீசாலை அல்லாரை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா பாலச்சந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பெருவிளக்கே அப்பா
நீங்கள் பட்ட துன்பங்கள் வர்ணிக்க
வார்த்தையில்லை
உங்களுக்காக நீங்கள் எப்போதும்
வாழ்வை பயணித்து வாழ்ந்ததை
நாம் அறியோம்
ஓய்வு என்று நீங்கள் வீட்டில்
இருந்த நாட்கள் எப்போதும்
நாங்கள் அறிந்ததில்லை அப்பா
ஒவ்வொருவருக்கும் உங்கள் சக்தியை
மீறி வழிகாட்டினீர்கள் அப்பா
ஊரறியா உண்மைகள் அனைத்தும்
இங்கே ஊமையாய் உறங்கி
கிடக்கின்றன அப்பா
இனி நீ யார் என்று மற்றவர்
ஒன்று சேர்ந்து தூற்றி நிற்க்க
அட இது தான் உனக்கு
கிடைத்த பரிசு என்று ஊறே
வியந்து நிற்க்க
இருப்பினும் காலம் பதில் சொல்லும்
என்று உங்கள் ஆத்மா ஓங்கி
ஒலிக்க
அத் தொனியில் நாம் அமைதி
கொண்டோம் அப்பா
அணையா பெருவிளக்காய் நித்திய
வாழ்வு கொள்ளுங்கள் அப்பா
விழி நீருடன் நீங்கள் நேசிக்கும் நாம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி