![](https://cdn.lankasririp.com/memorial/notice/204815/292ec90a-62fe-4054-a720-26ed50528e39/22-61f3b78e05b84.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/204815/acee90c0-255b-4656-a2a3-4dc2cf1f7827/21-6061b1a150e8a-md.webp)
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/lamp.png)
எமது தமிழ்ப் பள்ளியின் பழைய மாணவன் செல்வன் ரிதுசன், மாணவி செல்வி றிஷா ஆகியோரின் தகப்பனார் திரு சி.ரமேஸ்வரன் அவர்களின் மறைவு எமக்குப் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. பருவத்தே பயிர் செய்து பயன் விளையும் காலத்தே புலம்பெயர்ந்தாற்போல, தம் பிள்ளைகளின் எழுச்சியையும், ஏற்றத்தையும் முன்னிருந்து பார்க்காமல் பாதியிலே சென்றதுவும், வளர்ந்த கொடி கொம்பு பற்றி மேற்செல்லும் வேளையிலே, கொழுகொம்பையே பிடுங்கினாற்போல, காலன் அவரைக் கவர்ந்து சென்றதும் கொடுமையே!!!!!! எமது பள்ளியின் போட்டிகளிலும் சங்க நிகழ்ச்சிகளிலும் சங்கத்தின் வளர்ச்சியிலும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கிவரும் இக்குடும்பத்தின் இழப்பின் வலியை நாமும் உணர்கின்றோம். அன்னாரின் ஆன்மா இறையடியில் இளைப்பாற மனதார வேண்டுகிறோம். அவர் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, புளோமெனில் தமிழ்ச் சங்கமானது எக்காலத்திலும் அவர்களின் அருகே உறுதுணையாய் நிற்கும் என்று உறுதி கூறுகின்றோம்.