
யாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னதுரை பரதன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டு ஆண்டுகள் கடந்தாலும்
உனது நினைவு நாடி ஈர விழிகளுடன்
உன் வதனம் தேடி தீராத வேதனையை
மனதில் பூட்டி மாறாத நினைவுகளில்
நாமும் வாழ்கின்றோம்
எனது மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
என்னுள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்
உனக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடு...
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில் அழியாமல் நீ இருப்பாய்...
உடன்பிறப்பே என் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே என் அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த என் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எனது உடன்பிறப்பே
உம் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...
This message is for Nathan's sister. Can you please call me on 07505396220. wts app. UK Thank you Suji