யாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னதுரை பரதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அரையாண்டு முடியும் முன்னே
ஐம்புலன்களையும் அடக்கிவிட்டான் அந்த இறைவன்
ஐந்து ஆண்டுகள் சென்றுவிட்டன
ஆனாலும் அடங்கவில்லை எங்கள் துயரங்கள்
வாழ்க்கை என்பது சிறியது
வசந்தகாலம் வரும்போது
வலிக்க வலிக்க வாரி
அணைத்துக் கொண்டான் இறைவன்
வாழ்விழந்து வலிதாங்க முடியாமல் துடிக்கின்றேன்
வாழ்நாள் முழுவதும் புழுவாக துடிக்கின்றோம்
வையகத்தில் மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்
மிகுதி வாழ்விற்கும் உறவாக நீங்கள் வேண்டும்
மீண்டும் ஒருமுறை எம் கண்முன்னே
உங்கள் சிரிப்பான முகத்தை பார்க்க வேண்டும்
ஆலமரம் வேர் சாய்ந்து விழுந்துவிட்டால்
அந்த மரத்தடிக்கு யார் வருவார்கள்?
ஆயிரம் ஆயிரம் உறவுகளுக்கு
ஆதரவுக் கரம் நீட்டினீர்கள்
உற்றார், உறவினருக்கும் உதவியாய்
உன்னதமான மனிதராய் வாழ்ந்தீர்கள்
உங்கள் ஆத்ம சாந்திக்காக என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
This message is for Nathan's sister. Can you please call me on 07505396220. wts app. UK Thank you Suji