1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிங்காரி அருணாசலம்
முன்னாள் அரச கூட்டுத்தாபன RVDB - Chief Internal Auditor
வயது 86
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்தசிங்காரி அருணாசலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்பு
முகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை அப்பா!
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Remembering his kind and gentle soul will remain in our hearts. May he rest in peace!