1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவநாதன் ஜீவரஞ்சினி
வயது 53

அமரர் சிவநாதன் ஜீவரஞ்சினி
1968 -
2022
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS Road ஐ வசிப்பிடமாகவும், கனடா Newmarket ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த சிவநாதன் ஜீவரஞ்சினி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் மறைந்து ஓராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன்நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்.
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே
உதரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால்
இன்முகம் மலர்ந்திடுவீர்
எழுத முடியவில்லை, இதயம் கனக்கின்றது
எம்மை விட்டு நீ நீங்கியதாய் நாம் நினைப்பதில்லை
அம்மா நீ எம்மோடு இருப்பதாய்
கற்பனையில் கழிக்கின்றோம் தாயே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்