7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிரான் மக்ஸ்மியன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை விட்டு போனவனே
மகனே என அணைக்க முடியாத
சோகத்தால்- எம் மனம் இருண்டு போய்
உள்ளதைய்யா.!
வாய் விட்டுச் சொல்லவும்
வார்த்தையில்லை மனம் விட்டுப் பேசவும்
இன்று நீ இல்லை
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?
மொட்டாகி பூவாகி காயாகி
கனியாகும் வேளையில் காத்திருந்து
படைத்தவன் பழி தீர்த்தானோ ?
எங்களை தவிக்க விட்டு நீர்
தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண வருவாயா
ஓர் கணமே? பிறந்து விட்டோம்
இம்மண்ணில் இறுதிவரை
வாழ்வோம் நீ விட்டுச் சென்ற
நீங்காத நினைவுகளோடு... !
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்