யாழ். வலிமேற்கு சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்தகுமாரி கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
இந்தப் புவியின் அழகில்
நீங்கள் ஒரு தனியழகு
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை
துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர் கொத்துக்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Dear Senthil and family, My deepest and heartfelt condolences on the passing of your beloved mother. May her soul rest in peace, may you find strength,comfort and peace in the memories you shared.