நினைவஞ்சலி
பிறப்பு 12 JUN 1951
இறப்பு 22 JUL 2020
அமரர் சாந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி
வயது 69
அமரர் சாந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி 1951 - 2020 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட சாந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்றவர்களான K.P செல்லையா(தருமர்) அன்னப்பிள்ளை(Raja Rice Mill, Jaffna) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணேஷமூர்த்தி(Moorthi Master, Jaffna) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணமூர்த்தி(Former Chief Secretary  North - East Province) அவர்களின் அன்பு மனைவியும்,

லக்‌ஷ்மன்(டென்மார்க்), சுஜாத்தா(இலங்கை), கங்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுபா(டென்மார்க்), ஸாகீர்(இலங்கை), நந்தசுதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஷ், மக்‌ஷிட், ஸத்திப், துவாரகன், பிரகதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

புவனம்(லண்டன்), விக்னராஜா(இலங்கை), கமலா(இலங்கை), ரஞ்சிதம்(கனடா), லீலாவதி(கனடா), லலிதா(Dubai), செல்வரட்ணம்(லண்டன்), பத்மினி(அவுஸ்திரேலியா), கேதீஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 உங்கள் திடீர் மறைவினால் நாங்கள்
திசை மாறிப் போனோம் அம்மா!

இன்றுடன் முப்பத்தொரு நாள்
உங்கள் முகம் காணாது துடிக்கின்றோம்
முப்பது நாள் என்ன முப்பது வருடம் என்ன
எங்கள் ஆயுள் உள்ளவரை
எங்கள் இதயத்திலிருந்து பிரிக்க
முடியாது தாயே!!

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே

காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை..

அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும் தொலைபேசியூடாகவும், வலைதளங்கள், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர் வளையங்கள், மலர் மாலைகள் சாத்தியவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

தகவல்: கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices