கொழும்பு ஜிந்துப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சாந்த அன்ரனிகுமார் கொஸ்தா அவர்களின் நன்றி நவிலல்.
நிழல் போல் இருந்தாயே
நினைவாய் மாறிவிட்டாய்
கண்ணுக்கு ஒளியாய்
நெஞ்சில் நினைவாய்
எம் நெஞ்சமெல்லாம் நிறைவாய் இருந்து விட்டு
எங்கு சென்றாய்?
வளர் பிறையாய் நாம் வளர
தேய் பிறையாய் தேய்ந்து போன
தியாக சுடரே
எங்கள் உணர்வோடு கலந்த உறவே
இன்று உங்கள் பிரிவின் நினைவால் வாழ்கின்றோம்
அதனால் உணர்வின் வலியை எங்கள் கண்ணீரில்
அஞ்சலியாக காணிக்கை ஆக்குகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.