



இனிய சகோதரா .. எல்லாமே உண்மைதானா .. ஏதேதோ செல்கிறார்களே.. எல்லாமே உண்மைதானா.. நீ - இல்லையென்பதும் ஏற்பிலா உண்மைதானா.. உன்னிலே உதித்த கற்பனைக் கதையும் உள்ளே கனன்ற இலட்சியக் கனவும் பொய்யாகிப் புரண்டு புழுதியில் விழுந்ததுவோ.. மெய்யகன் றுன்னுயிர் மௌனமாகப் பிரிந்ததுவோ .. ஐயகோ அண்ணா.. இது என்ன சோகம் இமை மூட முடியாது.. விழி நீரின் கோலம்.. வழுக்கு மரத்திலே.. சறுக்கியே ஏறிடும் சளைத்திடாதொரு வீரனைப்போலவே.. உரிப்பது கல் நாரென்ற உண்மை தெரிந்தும் இளைத்து நிற்காது - அழுத்த மனத்தோடு அலைந்து திரிந்து .. கலைக் கயிறு திரித்தாயே .. தமிழ் படம் எடுத்தொரு திரைப் பாடம் நடத்திட லண்டனில் - அழைத்த இடமெலாம் ஓடி அலைந்தாயே.. எதற்குமே அஞ்சாத உன்மனச் செருக்கினை நாமறிவோம்.. இயக்குனராகவே எத்தனை கனவுகள் உன் மனக் குவியலில் ஓ - சகோதரா.. ஒவ்வொரு பொழுதும் எதேட்சையாகவே ஏதோ ஒரு நிகழ்வில் நிறைத்த மகிழ்வோடு நின்று நீ பேசுகையில்.. உன் திரைக் கனவு தான் - கண்ணிலே மிதக்கும்... உறுதியாகவொரு இலட்சிய வேட்கை எப்படியாகிலும் வாக்கிலே எட்டிப் பார்க்கும் ... 'எங்கட படைப்பு - எங்கட படம் - இலங்கேலை மட்டுமில்லை இங்கையும் ஓடும்.. ' பாகுதி நேரப் பிடிப்போடை - பொழுது போக்குப் பொறுப்போட அரிதாரம் அப்பிய எங்கட மனசும்.. அரை குறை நினைப்போடை.. எதிர்மறையாகவே.. உள்ளுக்கை சிரிக்கும்.. எல்லாத்தையும் உடைச்சு .. எம்மாலும் முடியுமென்டு சாதிச்சுக் காடடியவன் நீ - சண் அண்ணா.. எரிமலையாகவே எழுந்து நின்றொரு சகாப்தம் படைத்தவன் நீ - சண் அண்ணா.. இனியொரு நம்பிக்கை யார் கொடுப்பாரோ.. இளையவர் திரைக் கதவு யார் திறப்பாரோ.. ஆத்ம சாந்திக்காக இறைவனை மன்றாடுகிறோம்.

Thank you to everyone that helped and wrote about Appa. It would have meant a lot to Appa. Thank you! Kind regards, Shanmuganathan Family ?