மட்டக்களப்பு ஏறாவூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகவடிவு இராஜரெட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01/03/2023
ஆண்டுகள் ஒன்று ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!!!
எம்மை ஈன்ற எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனிய சொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!!
உதிரம் கொடுத்து உதரத்தில் தாங்கி
நாங்கள் உறங்க நீ விழித்து
நல்லது கெட்டதை நயம்பட கூறி
நாளும் எம்மை நேர்த்தியாய் காத்து
கல்லும் முள்ளும் நிறைந்த பாதையை
வெற்றிக்கனியாய் மாற்ற வேதனையை சுமந்து
பிள்ளைகள் மீது பித்துக் கொண்டு
அன்பை பொழிந்து ஆளாக்கினாய் அம்மா!!!
நீயின்றி வாழ்வு நித்தமும் கசக்க
அழகு முகம் காணா அனுதினம் வாடி
நிம்மதி இழந்து நிலைகுலைந்து போனோம்
அம்மா!!!
ஓரு வருடம் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் எம்மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அம்மா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குகிறோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
எங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டாய்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலாது!!!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்...
Our heartfelt condolences for the loss of your beloved mother. May her soul rest in peace.