Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
தோற்றம் 26 JAN 1940
மறைவு 01 JAN 2026
திருமதி பாலபரமேஸ்வரி சண்முகராஜா
வயது 85
திருமதி பாலபரமேஸ்வரி சண்முகராஜா 1940 - 2026 கொற்றாவத்தை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜா பாலபரமேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

எங்கள் வீட்டு குலதெய்வமே
 எங்களை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்திவிட்டு மீளாத் துயில் கொண்டு

 நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
 எங்கள் நெஞ்சை விட்டகலாது!

 உண்ணாமல் உறங்காமல் உனையிழந்து
ஓர் திங்கள் ஆனதுவோ...?
என்னே கொடுமையிது இறைவனுக்கும்
இதயமில்லை உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா

 நான் விடும் மூச்சிலே உன் கருவறை
வெப்பம் உணர்கின்றேன் என் சிரிப்பினிலே
 நீ பட்ட துன்பம் காண்கின்றேன்..
 உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!! 

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 30/01/2026 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று ஊர்வலமாக பொலிகண்டி தீர்த்தக்கரையில் அஸ்தி கரைக்கபடும். பின்னர் 31/01/2026 சனிக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் சபிண்டீகரணக் கிரியைகளிலும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.  

முகவரி:
கணபதி மில்,
கொற்றாவத்தை,
வல்வெட்டித்துறை. 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்