யாழ். அராலி மேற்கு வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், வேலனை 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், புத்தளம், ஜேர்மனி Bergisch Gladbach ஆகிய இடங்களை வசித்துவந்தவருமான சண்முகம் பரமசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி தேதி: 08-11-2026
முதலாம் ஆண்டு நினைவு மலர்
ஓராண்டு நிறைந்த இந்நாளில்,
எங்களுயிரோடு கலந்த உங்களுக்காக...
எங்கள் வாழ்வின் வாசலில்
நிழலாய்
நின்ற பெருமரம் நீங்கள்...
வெயில் எரிந்த பொழுதெல்லாம்
எங்கள் மீது நிழல் விரித்த அந்தக் கரங்கள்,
இன்று எங்கள் விழிகளுக்கு எட்டாத துரத்தில்...
உங்கள் அன்பின் அரவணைப்பில்
வளர்ந்த எங்கள் நாட்கள்,
இன்று உங்கள் நினைவுகளைத் தழுவியே
ஒவ்வொரு விடியலையும் கடக்கின்றன...
சொல்லத் தவறிய வார்த்தைகளும்,
சொல்லி முடிக்காத பாசமும்
நெஞ்சக்குள் நிறைந்து நிற்கின்றன...
எத்தனை பிறவிகள் கிடைத்தாலும்
எங்கள் தந்தையாக நீங்கள் வர வேண்டும்...
இந்தப் பிறவியில் விட்டுச் சென்ற
உங்கள் அன்பின் தடங்களைத் தேடியபடி,
கண்களில் நீரும்...
இதயத்தில் உங்கள் நினைவும்...
என்றும் வாழ்வோம், அப்பா.
உங்கள் பிரிவில் துடித்து,
உங்கள் நினைவில் தவித்து நிற்கும்
உங்கள் உதிரம் கலந்த உறவுகள் நாங்கள்...