

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், இல. 256, மாடசாமி கோயில் வீதி, பண்டாரிக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் மகேந்திரன் அவர்கள் 05-03-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரட்ணம், நல்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
கிரிஷாந்(மருத்துவபீட இறுதியாண்டு மாணவர்), சௌமியா(வயம்ப பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசுப்பிரமணியம், பரமேஸ்வரி, பூமாதேவி, காலஞ்சென்ற விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, புஸ்பராணி, செல்வராஜா, கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், பஞ்சலிங்ம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2022 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இரட்டையர்புலம், வைரவர் கோயிலடி, சண்டிலிப்பாய் எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொட்டுப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Accept our heartfelt condolence.