Clicky

அன்னை மடியில் 26 JAN 1945
இறைவன் அடியில் 06 MAY 2020
அமரர் சண்முகம் குமாரவேலு
முன்னாள் காயத்திரி கடை உரிமையாளர்- Paris
வயது 75
அமரர் சண்முகம் குமாரவேலு 1945 - 2020 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
26 JAN 1945 - 06 MAY 2020
Late Shanmugam Kumaravelu
மரண அறிவித்தல் - திரு சண்முகம் குமாரவேலு முன்னாள் காயத்திரி ஸ்தாபன உரிமையாளர் (Paris Lachppelle)யாழ் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு,பிரான்ஸ் (Paris),லண்டன், ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் குமாரவேலு அவர்கள் 06-05-2020 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் எய்தினார் நண்பர் குமாரவேலு அவர்கள் எனது 55 வருடகால சிறந்த மதிப்புமிக்க நண்பராவார் அவருடன் பழகிய காலங்கள் பொற்காலங்களாகும். புன்சிரிப்பு தவழும் முகம் நிமிர்ந்த பார்வை உயர்ந்த திடகாத்திரமான உடற்கட்டு அதுபோல் உயர்ந்த உள்ளம் கொண்ட அன்பு உள்ளம் படைத்தவர். நண்பர் அவர்கள் ஒரு சிறந்த கலைஞரும் சிறந்த நடிகருமாவார் எமது கலைமகள் கலைக்குழுவின் கொழும்புக்களையின் பிரதான அங்கத்தவர்களில் ஒருவராவார். கலைமகள் கலைக்குழு கொழும்புக் கிளையினர் 70ஆம் 74ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்திலும், இராமகிருஷ்ண மண்டபத்திலும் பிரசித்திபெற்ற இலங்கேஸ்வரன் நாடகத்தில் இலங்கேஸ்வரன் (இராவணன்) பாத்திரமேற்று இலங்கேஸ்வரனாகவே வாழ்ந்துகாட்டி அதி அற்புதமாக நடித்து கொழும்பு வாழ் தமிழ் மக்களின் பாராட்டையும் நல் மதிப்பையும் பெற்று எமது குழுவினருக்கு நல்ல புகளைத்தேடிக்கொடுத்தார். இப்பொழுது ஒரு சிறந்த நண்பனையும் அற்புதமான கலைஞனையும் இழந்தது பேரதிற்சியும் வேதனையாகவும் உள்ளது நீங்கள் எம்மைவிட்டுப்பிரிந்தாலும் உம் நினைவுகள் எம் இதயங்களில் நீங்காமல் நிறைந்திருக்கும். உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும், அனைவருக்கும் எமது குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி. அ.குணசேகரன் குடும்பத்தினர்
Write Tribute