திதி : 23-10-2022 தேய்பிறை திரயோதசி
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் கேதாரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
உங்கள் நினைவு என்றும்
எங்கள்
உள்ளங்களில் நிறைந்திருக்கும்!
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா
உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
நாம் மகிழ்ச்சியாக இருக்க
நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!
உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள்
புன்முறுவல்
பூப்பூத்தவதனமாய்
இருந்துகொண்டே இருக்கும்...
அப்பா நீங்கள் வாழ்நத
காலங்களில் நாட்டிய மரங்கள்...
இன்று நாங்கள் வீடு திரும்பும் போது
சுவை மிகுந்த பழங்களை தருகின்றன...
அதை பார்க்கும் போது உங்கள் நினைவு,
நீங்கள் கூறியவை எம்மை மெய்சிலிர்க்க வைத்தன...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!