Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 25 JUN 1955
இறப்பு 06 FEB 2021
அமரர் சண்முகம் பாலசுந்தரம்
வயது 65
அமரர் சண்முகம் பாலசுந்தரம் 1955 - 2021 அம்பன், Sri Lanka Sri Lanka
நினைவஞ்சலி

யாழ். அம்பன் குடத்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் பாலசுந்தரம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்பாலே எமை ஈர்த்து ஆண்டவனின்
சேவை செய்து துன்பம் எமை  அணுகாது
உலகிற்கோர் பகலோன் போல்
எம் குடும்பத்தின் குல விளக்கே

அன்பு வழி எமையாண்ட தந்தையே
ஊன் உறக்கம் மறந்து இரவைப் பகலாக்கி
இரத்தத்தை வியர்வையாக்கி எமை
வாழ்வாங்கு வாழவைத்த தெய்வமே

உன்செடியில் பூத்த மலர்கள்
எமை இங்கு வாடவிட்டு
வானுறையும் தெய்வமாகிவிட்ட
அன்புத் தெய்வத்திற்கு இம்மலரை சமர்ப்பிக்கின்றோம்

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் எதிர்வரும் 08-03-2021 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 07 Feb, 2021