காலத்தால் அழியாத காவியமாக தலை நிமிர்ந்து பெயர் போற்றும் தந்தை தாய் நல்லதொரு சேயாக வாழ்ந்த நாம் இன்று அன்றிலர்ந்த பறவைகள் போல் தவிக்கிறேன் அண்ணா தினமும் அண்ணன் மார்கள் அம்மாவுக்கும்(தெய்வம்) தினமும் பிராத்தனை செய்கிறேன் நினைவு கொள்ளாத நாள் இல்லை அண்ணா நீங்கள் என்னோடு தான் இருக்கிறீர்கள் உங்கள் நினைவு படம் கண்டதும் என் இதயம் நின்றிடும் போல் திசை மாறி துடித்தது அண்ணா நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் நடந்து வரும் போது பள்ளிமடு இராசையா வின் மணி போகிறான் என்ன அழகு என கூறியவர்கள் உண்டு அண்ணா உங்கள் திருமணத்தன்று கண்ணன் கோஷ்டியால் பாடிய பாடல் நினைவு வருகிறது உங்களுக்கு நினைவு இருக்கா? முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பிகள் பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாக வளர்ந்து வந்தோம் சின்னத்தம்பி பெரிய தம்பி செல்லமாக வளர்ந்த பிள்ளை மனம் மறுக்குதுஅண்ணா நீங்கள் இல்லாத உலகம் இப்போது தான் தெரிகிறது சகோதர பாசம் என்பது என்னவென்று சொல்லக் அழ எனக்கு யாருமில்லை நானும் வருவேன் அண்ணா விரைவில்!!!?!!!! எழுத சொல்கிறது என் இதயம் எழுத தடுமாறுகிறது என் விரல் நுனி இறைவனிடம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் தினமும் Farewell உங்கள் பாசத் தம்பி தீவான் இரா கோணேஷ் நேரர்வே/புங்குடுதீவு