யாழ். கரணவாய் மேற்கு வல்லியாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட சகிலாதேவி இளங்கோ அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்
நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள்
எண்ணி முடியாதவை
வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள்
சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
அன்பின் இறைவா எமக்கு இப்படியோர்
அன்பான அம்மாவை தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், உணவு தந்து உதவியவர்வர்களுக்கும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 17-07-2025 வியாழக்கிழமை அன்று காலை 05:00 மணியளவில் வல்லியாவத்தை தேவி மஹால் இல்லத்தில் நடைபெறும் அந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், மதிய போசன உபசாரத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
இளங்கோ - கணவர் +94743359194