31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 12 SEP 1942
இறப்பு 30 APR 2021
அமரர் சேதுகாவலர் இராசவல்லவன் 1942 - 2021 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஆதிமயிலிட்டி, சுன்னாகம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சேதுகாவலர் இராசவல்லவன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

சேதுகாவலர் குடும்பத்தின் முதல்வனாய் வந்துதித்தீர்!
சேனைத் தலைவனாய் உடன்பிறந்தோரை உய்வித்தீர்!
புன்முறுவல் பூத்த முகம் உதிரும் வார்த்தைகளில் தெளிவு
இன்னமும் எம்முன்னே பிம்பமாய்
கல்வியால் நீர் விதைத்த விதைகளெல்லாம்
நல்லபெரும் தருக்களாய் உங்கள் புகழ் பாட
இமைக்கும் பொழுதினிலே உயிர்நீங்கினாலும்
எம்மைப் போன்ற பலரது நினைவுகளில்
நீங்கள் என்றும் நீங்காது வாழ்கின்றீர்கள் என்றறிந்து
நாங்கள் தேறுகின்றோம்.


எங்கள் குடும்பத் தலைவர் உயிர்நீத்த செய்தியறிந்து உடனுதவிய உறவினர்கள், அயலவர்கள் மற்றும் நண்பர்கள் எம் துயரில் நேரில் பங்கு கொண்டோர், தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் சமூகவலைத்தளங்களுடாக ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்தோர், துண்டுப்பிரசுரங்கள், கண்ணீர் அஞ்சலி மூலமும், மலர்வளையங்கள் சாத்தியும் துயர் பகிர்ந்தோர், இறுதி யாத்திரையில் இரங்கல் உரை நிகழ்த்தியோர் மற்றும் பல வழிகளில் இன்றுவரை எம்முடன் உணர்வுகளை பகிர்ந்துகொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எம் உளமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

(பயணத்தடை காரணமாக ஆத்மசாந்திப் பிரார்த்தனைக்கு அழைக்க முடியாமைக்கு வருந்துகிறோம்)

We thank the relatives, neighbours and friends who extended their hands of support during the irreplaceable loss of the head of our family, and who came to console our hearts in persons. Your comforting expressions of sympathy conveyed to us over the phone, via email and social media, by publishing handbills and by placing wreaths will always be remembered with deep gratitude. The eulogies delivered at the end of the ritual are solemnly appreciated. We once again acknowledge those who expressed their thoughtful emotions and call for prayers collaboratively that his soul rest in peace.

(We are regretted to invite you to the 'Anthiyeddi' day for the prayer due to travel restrictions imposed in view of spread of Covid 19)

வீட்டு முகவரி
இல. 17,
செல்லாச்சி அம்மையார் வீதி,
சுன்னாகம்.
இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விபுலானந்தா(சூட்டி மாஸ்ரர்) - சகோதரன்
முகுந்தன் - மகன்
கேதீசன் - மருமகன்
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்