Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 JUL 1950
இறப்பு 31 JAN 2023
அமரர் சேனாதிராஜா ஞானலிங்கம்
வர்த்தகர் வெள்ளவத்தை Home Needs- உரிமையாளர்
வயது 72
அமரர் சேனாதிராஜா ஞானலிங்கம் 1950 - 2023 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா ஞானலிங்கம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 28-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை முகத்துவாரத்தில் புண்ணிய கர்ம காரியங்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கிரியைகள் நடைபெறும். 04-03-2023 சனிக்கிழமை அன்று காலை 11:00 மணிமுதல் 03:00 மணிவரை அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வும் மதியபோசனையும் நடைபெறும்.

இடம் : பம்பலப்பிட்டி தொடர்மாடி சனசமூக மண்டபம் (Bambalapitiya Flats Community Center)

இந்நிகழ்வுகளில் தங்களையும் தங்கள் குடும்பத்தவர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.