இலங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster, கொழும்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பற்றிமா தேவசகாயம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் வாழ்வில் ஒளியாக வந்து,
அன்பின் அர்த்தத்தை எங்களுக்கு உணர்த்தி,
தியாகத்தின் வழியில்
எங்களை வளர்த்த
எங்கள் அன்பு அம்மாவே...
நீங்கள் எங்களோடு இருந்த நாட்கள்
இன்று இனிய நினைவுகளாகிவிட்டன
உங்கள் பாசமான வார்த்தைகளும்,
உங்கள் அன்பான புன்னகையும்
என்றும்
எங்கள் இதயத்தில் வாழ்கின்றன
எங்களைச் சுற்றி பாதுகாத்த உங்கள் ஜெபங்கள்,
இன்றும் எங்கள் வாழ்வின் பலமாக இருக்கின்றன
நீங்கள் எங்கள் கண்களுக்கு மறைந்தாலும்,
கர்த்தரின் அன்பான கரங்களில்
அமைதியாய் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை
எங்கள் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது
ஒரு நாள் ஆண்டவரின் சந்நிதியில்
மீண்டும்
உங்களை சந்திப்போம் என்ற
விசுவாசத்துடன் வாழ்கிறோம்....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our deepest condolences to your families