7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வதுரை சிறிஸ்கந்தராஜா
சிறி
விண்ணில்
- 07 AUG 2017
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ், கொக்குவில் கோணமலை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmunt, லண்டன் Tooting ஐ அகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வதுரை ஸ்ரீகணதராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆனாலும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
ஆண்டு ஏழு கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல் எம்மைக் காத்த
அன்புத் தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்