

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி வெடிவைத்தகல்லு, மகாறம்பைக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வத்துரை பாக்கியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-08-2024
உயிருக்குள் உயிரான தெய்வமே!
எங்கள் உலகமே நீங்கள் தான் என்றிருந்தோம்
ஏன் இப்படி நடந்தது?
எங்கள் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உங்கள் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச்
செய்யுதம்மா!!
நேற்று போல் இருக்கிறது
உங்கள் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் எங்களை மறந்தீர் அம்மா!
எங்கும் நிழலாய் பின்தொடர்ந்தீர்கள்- இப்போது
பாதிவழி விட்டுவிட்டு பரலோகம் சென்றது ஏன்?
அன்பிற்கே சாவு என்றால் அகிலம் என்னாவது?
என்னுயிரே வந்துவிடு ஏங்கி நாங்கள் தவிக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஒட்டுசுட்டான் சம்மளங்குளம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
