முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி வெடிவைத்தகல்லு, மகாறம்பைக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வத்துரை பாக்கியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-08-2023
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் – நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள் நெஞ்சமதை
நெகிழ வைத்தாய்!
உங்களை உருக்கி
எங்களை உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை
எமக்கு உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும்
காலம் இனி என நாம்
மகிழ்வுற்று இருக்கையிலே
காலனவன் செய்த சதி இதுவோ?
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...