யாழ். வண்ணார்பண்ணை கலட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரெட்ணம் தனலக்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
முப்பத்தொரு(31) நாட்கள்
கணப்பொழுதில் மறைந்தது அம்மா
அன்பு ஒழுகும் தங்க முகம்
மறந்தோமில்லை
மூண்டெரியும் துயரக்கனலில் துடிக்கின்றோமே
வேண்டிடுவீர் இறைவனிடம்
எம் உள்ளத்தின் வேதனைகள்
தீர்த்தருளுவீர் விழைந்தோம் சாந்தி !
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிருத்தியக் கிரிகைகள் 11-04-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் அவர் தம் இல்லத்திலும் அதனைத்தொடர்ந்து மறுநாள் 12-04-2025 சனிக்கிழமை அன்றூ மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை கனடா ஐயப்பன் ஆலைய விருந்தினர் மண்டபத்தில்(Sri Ayyappa Samajam Of Ontario, 635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8, Canada) நடைபெறும் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் மதியபோசனத்திலும் குடும்ப சகிதம் கலந்து கொண்டு அமரர் தம் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் வண்ணம் பணிவுடன் வேண்டுகின்றோம்.