மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், யாழ். தொண்டைமானாறு, கொழும்பு தெஹிவளை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் நேசரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.
எம் குடும்பத்தின் பாசமிக்க தாயே
உற்ற உறவுகளின் கருணை உள்ள அன்னையாக
அன்பால் எல்லோரையும் இணைத்து
அரவணைப்பால்அனைவரையும் பிணைத்து
பெண்ணொன்று இப்புவியில் பிறந்து
எண்ணற்ற பேறெல்லாம் பெற்று வாழ்ந்து
கண்போல எம்மைக் காத்து, வழிகாட்டி வளர்த்ததாயே
மண்விட்டு இன்றெம்மைத் தனியாக்கி
விண்சென்று இறையடி அடைந்தீர்களோ அம்மா
எண்ணுகின்றோம் அம்மா நீங்கள் இறையடியில்
கண்மூடி அமைதியொடு சாந்தி பெற வேண்டி
கண்ணில் நீரோடு பிராத்திக்கின்றோம் அம்மா
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our deepest condolences. Pray god bless her soul and rest in peace in heaven. Christy family ( stella's brother)