Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 JAN 1972
இறப்பு 01 FEB 2018
அமரர் செல்வரத்தினம் மதியழகன் (ராசா)
வயது 46
அமரர் செல்வரத்தினம் மதியழகன் 1972 - 2018 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரத்தினம் மதியழகன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமக்கெல்லாம் நல்வழி காட்டிய தீபமே!
எம் குடும்ப விளக்கே!
நீங்கள் எம்மை விட்டுச் சென்று
மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டதே
நம்ப முடியவில்லை நாளும் தெரியவில்லை

உங்கள் இனிய அன்பான கதைகள்
எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன
உங்கள் சிரித்த முகம்
அன்பான பார்வை கொண்ட தோற்றம்
எம் கண்களில் தெரிகின்றதே
எங்களிடமிருந்து உங்கள் உயிரைப் பறித்த
விதியை என்னென்று சொல்வது அப்பா

உங்களை நினைக்காத நாளுமில்லை
கண்ணீர் விட்டு அழாத நேரமுமில்லை அப்பா
நீங்கள் எம்முடன் கூடவே இருக்கின்றீர்கள் அப்பா
நீங்கள் மறையவில்லை என்றென்றும்
எங்களுடன் வாழ்கின்றீர்கள் அப்பா

உங்கள் ஆன்மா அரியாலை சித்தி விநாயகர்
திருவடி நிழலில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். 

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Photos

No Photos

Notices