
முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் பாக்கியம் அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காங்கேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயவதனி(ஆசிரியை- வற்றாப்பளை மகா வித்தியாலயம்), ஜெயலதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பொன்ராஜ்(ஆசிரியர்- முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி), ஈராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
துவாரகன், கம்ஷா, ஓவியா, சுபிட்சன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஜெனுசன், அரவிந், சனா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கனுக்கேணி மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கற்பூரப்புல்வெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.