1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா பரமேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனது அம்மா
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் நினைவு நிழலாகத்
தொடரும் அம்மா!
ஆயிரம் அறிவுரை சொல்லி
அகிலத்தைக் காணவைத்தீர்
சோதனை பல தாண்டி- எம்மை
சொர்க்கத்தின் கரைசேர்த்தீர்
எம் அன்னையே....
வார்த்தைகள் இல்லாத உங்கள்
வடிவம் கண்டோம் அம்மா
வர்ணிக்க முடியாத வார்த்தைகள் கண்டோம் அம்மா
அளவிட முடியாத உங்கள் அன்பு கண்டோம் அம்மா
சுயநலம் இல்லாத இதயம் கண்டோம் அம்மா
என் அம்மாவின்
அன்புக்கும் கனிவுக்கும் முன்னால்
எவராலும் ஈடுசெய்ய முடியுமா?...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்