31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 16 JUL 1973
இறப்பு 19 MAY 2021
திரு செல்வராசா மகேசன் (அப்பன்)
வயது 47
திரு செல்வராசா மகேசன் 1973 - 2021 கரணவாய் மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரவெட்டி கரணவாய் மேற்கு சோளங்கனைப் பிறப்பிடமாகவும், கரணவாய் மேற்கு தீராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா மகேசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

வாழ்க்கையின் பாதிவழியில்
உன் பவனி அமைதியானதோ
பரனியில் ஏங்கிய உன்
உறவுகளை விட்டு
உடல் மாயமானதோ

மடியில் பூத்த முத்துக்கள் மூன்று
நினைவுகள் கனவானதோ மூன்று
முடிச்சு போட்ட துணைவியின்
கண்கள் குளமானதோ

உன்னை பிரிந்து உடன்பிறப்புகள்
மனமும் பாலை வனமானதோ
மருமகனாக அரவணைத்த
உன் நினைவுகள் பாரமானதோ
மாமா என்றழைக்க இனி
ஒரு இனிய உறவு கிடைத்திடுமோ

சித்தப்பா உன் புன்சிரிப்பு
எமக்கு கடைசி விடையானதோ

ஊருக்காக உழைத்த உத்தமர்
உடல் உறங்கிக்கொண்டதோ
அத்தான் என்ற ஒரு அன்பு
குரல் அடங்கிபோனதோ

பெரியப்பா என்னும் பெட்டகம்
பேளையில் ஓய்துபோனதோ
மருந்தில்லா மாய நோய்
உன்னை காவுகொண்டதோ
மரித்தும் உன் நினைவு
என்றும் எம்மில் ஒட்டிக்கொண்டதோ

மாறத கடும் துயர் நம்மில் பற்றிக்கொண்டதோ
 விண்ணோடு நீ இருந்தாலும்
மண்ணில் எம் மனதில் என்றும் வீற்றிருப்பீர்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.