யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Stains ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா கமலாதேவி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்றாகியும் மாறவில்லை உன்
மறைவு வலி உனது சட சட பேச்சும்
உதட்டோர புன்னைகையும்
என்றும் எம் மனங்களின் வீற்றிருக்கும் தாயே
சொத்து சுகம் ஏதுமில்லை சொல்லி அளயாருமில்லை
தாயை விட சொத்து சுகம் வேறேது எனக்கு சொல்லி
சொல்லி நான் அழதா தீராது கணக்கு பெத்து வளத்து
நல்லா பேருமிட்டு என் தெய்வப் பிறவி போனாளே.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரது 31ம் நாள் நினைவஞ்சலி அவரது இல்லத்தில் 22-07-2025 செவ்வாய்க்கிழமை நடைபெறும் அந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் மதியபோசன் உபசாரத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.