கொரோனா உனக்கு இரக்கம் வராதா ? ஏய் மரணமே உனக்கு ஒரு மரணம் வராதா? ஏய்.. கண்ணீரே உனக்கு ஒரு கண்ணீர் வராதா ? என் மகனை கொண்டு போயிட்டியே. இனி நீ இல்லாமல் நாங்கள் எப்படி இருக்க போகிறோம் மகனே ? நீ இல்லாமல் உன் பெற்றோர் , மனைவி மக்கள் எப்படி வாழப் போகிறார்கள் ? கதறி அழும் உன் மனைவி மக்களைப் பார் மகனே. உறைந்து நிற்கும் உன் தங்கையை பார் மகனே. ஊரில் புலம்பும் உன் தாய் தந்தையை பார் மகனே. எங்களை எல்லாம் இப்படி அனாதையாக விட்டு செல்ல உனக்கு எப்படி மனம் வந்தது மகனே ? இருப்பினும் உன் ஆன்மா சாந்தி அடையட்டும்... உன் வழிதனை நிறைவேற்றுவோம் நாமும் முடிந்தவரை.. எமக்கு தெரியும் உன் எண்ணம்.. தூங்கு மகனே நிம்மதியாக தூங்கு.. ஓம் சாந்தி ஓம் சத்தியநாதன் குடும்பம் ( சித்தப்பா/ சித்தி ) சண்டிலிப்பாய் - இங்கிலாந்து