Clicky

தோற்றம் 24 JUN 1952
மறைவு 23 JAN 2021
அமரர் செல்வராணி வயித்திலிங்கம் 1952 - 2021 சுழிபுரம் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பூவுலகம் 30 JAN 2021 Sri Lanka

ராணி மாமி என அன்போடு அழைக்கும் மாமி இன்று எம்மிடையே இல்லாதிருந்தும இருக்கிறார். மென்மையான சிரிப்பு, இலங்கையில் பிறந்திருந்தாலும் பள்ளிப் படிப்பகளை தொடர்ந்தது மலேஷியா என்பதினால் தமிழ் பேசுவதில் வித்தியாசமான நடை , துடிப்பான மென்நடை, எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் பண்பு , கணவனே கண்கொண்ட தெய்வமெனக்கருதி நிழல் போன்று அவர் பின் தொடர்ந்து கருமங்கள் ஆற்றிய செயல்திறன், சமகாலத் தொற்றுநோய் தீவிர பரவலால் கணவர் நோய்வயப்பட்டிருந்த வேளகளில் அவர் பணிவிடைகளை செய்ய இயலவில்லைய என மாமிக்கிருந்த ஏக்கம், உறவகளுடனான தொடர்பாடலில் மாமி காட்டிய கர்சனை , கணவர் தீவிர சிகிச்சை முறைமைகளின் கீழ் இருந்த போதிலும் கூட மற்றவர்கள் மனம் நொந்துவிடக் கூடாதென்பதற்காகவே அவர் உடல் நிலை பற்றிக் கூறும்போதெல்லாம் “இப்ப ok” எனச் சொல்லிக்கொள்வதில் இருந்த தன்னம்பிக்கை , கட்டியவீடு- பிறந்த இடம்- கணவர் பிறந்து வாழ்ந்த இடம்- நெருங்கிய உறவுகள்- தூரத்து உறவுகள்- நண்பர்கள்- எளியோர் என அனைத்திலுமே அவர் கொண்டிருந்த அக்கறை , இப்படி அனைத்திலுமே மாமி இலக்கம் ஒன்று. இப்படியான மாமியையோ மாமாவையோ அல்லது இது போன்றவர்களையோ காப்பாற்ற சொற்ப காலத்திற்கு முன்பாவது ஏன் தடுப்பூசி வரவில்லையே என்ற ஏக்கத்துடன் நாமிருந்த போதிலும் படைத்தவன் போட்ட பாதை வளியே தான் எம் விதி பயணிக்கும் என்ற மெய் உணர்ந்து , அவர்கள் இன்று எம்மிடையே இல்லாதிருந்தாலும் அவர்களின் ஆசியுடனேயே எமது வாழ்வு தொடரும், அவர்கள் எதிரபார்த்தவற்றை நிறைவேற்ற எமது முயற்சிகளை தொடர்வதே நாம் அனைவரும் அவர்களிற்கு செலுத்தக் கூடிய அஞ்சலியாகும்.