Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 AUG 1950
இறப்பு 23 JAN 2020
அமரர் செல்வராஜா சபாரட்ணம் 1950 - 2020 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வரராஜா சபாரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் குடும்ப விளக்கே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
கணப்பொழுதும் துடிக்கின்றோம்

இப்போ நம்மோடு நீர் இல்லையே!
போகும் இடமெல்லாம் உன் நினைவே... !
உம் அன்பை ருசிக்கையிலே
நம்மோடு நீருமில்லை!

ஆண்டு மூன்று மறைந்தாலும்
மனம் ஆறுதல் அடைய மறுக்கின்றது
எங்கள் சிரிப்பைத் தொலைத்து
ஆண்டு இரண்டு ஆனதிப்போ

நீர் எம்மை விட்டுச் சென்றாலும்
இறைவனிடம் ஒன்றிணைந்திடுவீர்!
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
அங்கே நீங்கள் இருப்பீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டுகின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்