13ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். இருபாலை கிழக்கு கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வராஜா இராஜலக்ஷ்மி அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-01-2026
தரணியில் பவனி வந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்று
பதிமூன்று ஆண்டுகள் ஆனதம்மா...
ஆண்டு பல ஆனபோதும் உனையிழந்த
தவிப்பதனில் ஏங்கி வாடுகின்றோம்...
நீ வாழ்ந்து முடிக்கும் முன் எமைவிட்டு
வாழாது மறைந்ததேனோ?
ஆண்டுகள் நூறாயினும் எம் நினைவுகளும்
வலிகளும் ஆறாதம்மா!
உன் மலர்ந்த முகம் இனி எப்போது காண்போம்....
ஆசைகளையும் கனவுகளையும் உன்னுள் அடக்கி
எம்மை பெரிதுவக்க வைத்தாய்
தினம் வந்து வாட்டும் உன் நினைவால்
நிலை குலைந்து நிற்கின்றோம்
கண் மறைந்த போதும் நீ
எம் கண்முன்னே நிற்கின்றாய்!
நாம் மீளாத்துயரோடு உன் நினைவுகளை
சுமந்து நிற்கின்றோம்...
உந்தன் ஆத்மா சாந்தியடையப்
பிராத்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
ஆத்ம சாந்திக்காய் பிரார்த்தனைகள்