1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வராஜா பிரேம்குமார்
(அத்தார்- பிறேம்)
வயது 50
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராஜா பிரேம்குமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உம்மைப் பறித்து
ஓர் ஆண்டு நீண்டு
நெடியதாய் கழிந்து போனதே அப்பா!
நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்து தான் போகின்றோம்
உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடம் ஒன்று வந்திட்ட
போதினிலும் நம்ப மறுக்கிறதையா
எங்கள் மனங்கள்
காலங்கள் மாறலாம் உங்களை
இழந்த ஆண்டுகள் மாறலாம்.
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால் எப்போதும்
மாற்ற முடியாது..
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்.
என்றும் எம்முள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்...
தகவல்:
குடும்பத்தினர்