1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வராசா காசியம்மா
வயது 87
அமரர் செல்வராசா காசியம்மா
1933 -
2020
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா காசியம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் ஆண்டு ஒரு நொடிப் பொழுதில் ஆனதம்மா
உங்கள் இழப்பை எம்மால் நம்பவே முடியவில்லை
ஓர் ஆண்டு கனப்பொழுதில் உருண்டோடி விட்டதம்மா
உங்கள் பிரிவு எம் மனதை வாட்டுதம்மா
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது எந்த
உருவத்தில் நுழைந்தது என்று
யாருக்கு தெரியும் அம்மா
உங்கள் பிரிவுக்கும் அந்த காலன்
அவன் என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
உங்கள் பிரிவுச் செய்தி இன்றும்
ஆணிவேராய் அடிமனதில் பதிந்ததம்மா
எங்களால் மறக்கவே முடியவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்