இலங்கை குருநாகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Kipling ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வபாக்கியம் ஞானதீபம் அவர்களின் நன்றி நவிலல்.
அம்மா எம்மை எல்லாம் பெற்று வளர்த்த அன்புத் தெய்வமே
உங்கள் திடீர் மறைவினால் நாங்கள்
திசை மாறிப் போனோம் அம்மா!
இன்றுடன் முப்பத்தொரு நாள்
உங்கள் முகம் காணாது துடிக்கின்றோம்
முப்பது நாள் என்ன முப்பது வருடம் என்ன
எங்கள் ஆயுள் உள்ளவரை
எங்கள் இதயத்திலிருந்து பிரிக்கமுடியாது தாயே!!
கருவாகி நாம் உருவானநாள் முதலாய் பெருந்துன்பம்
அனைத்தும் பொடியாக்கி
எங்களுக்கு எல்லாமாய் வாழ்ந்தீர்களே..!!
உங்கள் பிரிவால்
எல்லாம் இழந்தோமே எங்கள்
உள்ளத்தில் தெய்வமாய் இருப்பீர்கள்
உங்களை நினைத்து என்றும் தொழுதிடுவோம்
இறைவன் திருவடியில் சாந்தி பெறுவீர்கள்
ஓம் சாந்தி...! சாந்தி... சாந்தி!!!
அன்னாரின் இறந்த செய்தி கேட்டு நாம் கலங்கி நின்ற வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தும், இறுதிக்கிரியை, அஞ்சலி நிகழ்வுகளிலும் பங்கேற்றும் எங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Deepest sympathy