1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வநாயகம் ரட்ணம்
Land Development Department, Sri Lanka
வயது 84
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் ரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையின் மறு உருவமே!
ஓராண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
எமை எல்லாம் தாங்கிப் பிடித்த
வழிகாட்டியே நீர்
இப்பிறவி அல்ல எப்பிறவியிலும்
எமக்கு உறவாக வேண்டும்!
என இறைவனை மன்றாடுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
நான் எப்போதும் உங்களை மாமா என்று அழைக்க விரும்புகிறேன், நீங்கள் என் சிறிய மனதை பரந்த வழியில் வடிவமைத்துள்ளீர்கள். நான் 8 வயதில் இருந்தபோது உங்களை சந்தித்தேன், இது 1984 இல் உங்கள் வீட்டில் உள்ளது....