ஒரு மனிதர்இருந்தார் இறந்தார் என்றில்லாமல் அளப்பெரும் காரியங்களை செய்தார் என்பது தான் இந்த பிறவிப்பயனாகும். எவ்வாறு அது சாத்தியமாகும். தான்- தனக்கு—தன் குடும்பம் என்றல்லாமல் மனித குலத்தின் ஒட்டுமொத்த நன்மைக்கான சிந்திக்கின்ற பறந்த பார்வையும் துணிந்து செயற்படுகின்ற திறனும், எதற்கும் அஞ்சா மன உறுதியும், பொருள் ஈட்டும் மூளைத்திறன் கொண்ட மனமும், திறனும், மார்க்கமும் தெரிந்த மகத்தான மனிதனாக செல்வநாயகம் பாலசிங்கம்- அத்தான் வாழ்ந்தார். அவரை அருகில் இருந்து அவதானிக்கவோ, அன்பாக உறவாடவோ வாய்பில்லாவிட்டாலும் அவர் பற்றி பலராலும் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன். குறிப்பாக மட்டக்களப்பின் மகத்துவங்களின் ஒன்றான களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் வருடா வருடம் உதவினார் என்றில்லாமல், அதை பெரும் கனவாக கொண்டு களப்பணியாற்றியவர். பணம் கொடுக்கலாம், உடல் உழைப்பு தரலாம் ஒத்தாசை பண்ணலாம், ஆனால் கடல்கடந்து ஒவ்வொரு பூசைக்கும் தவறாமல் வருவது மட்டுமல்லாமல் தன் உடல், உயிர், ஆன்மா அனைத்ததையும் கண்ணகி தாயின் காலடியில் காணிக்கை ஆக்கியவர் செல்வநாயகம் பாலசிங்கம். புலம் வாழ் தமிழ் சமூகத்தின் கனவில் அன்றாடம் வந்து "உன் ஊருக்கா, உறவுக்காக, உள்ளம் கொண்ட ஆன்மிகத்திற்கா என்ன செய்கின்றாய்" என்று உறக்க கேட்கும் உள் உணர்வாய் இருப்பார் என்பதில் எனக் கொன்றும் சந்தேகம் இல்லை. இதுதான் "மறைந்தும் வாழ்வது" என்பது. அத்தான் நீங்கள் மறையவில்லை -மறக்கப்படபோவதும் இல்லை. உங்களிடம் வாழ்நாளில் கதைத்திறாத என்னால் உங்களை பற்றி இவ்வளவும் எழுத முடிகின்றது என்றால் நீங்கள் மாமனிதர்- மகாத்மா தான். நாங்கள் உங்கள் வழித்தடங்களை பின்பற்றி நடக்க முயற்சிக்கின்ற நடைமுறையை வளர்த்து கொள்கின்றோம். என்றும் உங்கள் ஆன்மா எங்களுக்கு வழி காட்டட்டும். என்றும் நன்றிக்கடனுடன் விழி நிறைய கண்ணீருடன் மனம் நிறைய சோகத்துடன் சுப்பிரமணியம் ரமணேஸ்வரன்- கண்ணன் அவுஸ்ரேலியாவில் இருந்து.
“அழகான சிரிப்பு! அன்பான வரவேற்பு!அரவணைக்கும் உபசரிப்பு!ஆத்மார்த்தமான கவனிப்பு!அருகிலிருந்து பேசுகையில் எமக்கு வரும் பூரிப்பு! இத்தனைக்கும் சொந்தக்காரரான நீங்கள் இன்று எமக்கு விட்டுச் சென்றதோ மாறாத...