Clicky

தோற்றம் 26 AUG 1958
மறைவு 16 DEC 2020
அமரர் செல்வநாயகம் பாலசிங்கம்
வயது 62
அமரர் செல்வநாயகம் பாலசிங்கம் 1958 - 2020 களுவாஞ்சிக்குடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thavajothy 27 DEC 2020 United Kingdom

“அழகான சிரிப்பு! அன்பான வரவேற்பு!அரவணைக்கும் உபசரிப்பு!ஆத்மார்த்தமான கவனிப்பு!அருகிலிருந்து பேசுகையில் எமக்கு வரும் பூரிப்பு! இத்தனைக்கும் சொந்தக்காரரான நீங்கள் இன்று எமக்கு விட்டுச் சென்றதோ மாறாத சலிப்பு!” தாங்கள் பெயரிலும் மட்டுமா சிங்கம் பார்வையிலும், நடையினிலும் கூட நீங்கள் சிங்கமே! கட்டுமஸ்தான உடல் வாகு, கம்பீர நடை, தளராத முயற்சி இவற்றுக்கெல்லாம் நீங்கள் சொந்தக்காரனன்றோ! சிரித்த முகத்துடன் எமை வரவேற்கும் காட்சி இன்றும் என் மனக் கண் முன்னே ஓடுகிறதே அண்ணா! ஆனால் இன்று எமையெல்லாம் விட்டு விட்டு நீங்கள் எங்கே ஓடி மறைந்தீர்கள்! நம்பவே முடியலையே! உடன் பிறவா சகோதரர் பாலா அண்ணாவின் மறைவையிட்டு அன்னாரின் துணைவியார், பிள்ளைகளுக்கும் மற்றும் அவரின் உடன் பிறந்த சகோதரரும் என் நண்பருமான பாலகுமார் அவர்கட்கும் எனது ஆழ்ந்த துயரத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.