வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி ஸ்ரீபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
வசந்த உற்சவத்தின்
மகிழ்நிலையில் நாமிருக்க
கைதவறி நீங்கள் போனதெங்கே
நொருங்கிப் போய் நிற்கின்றோம்
எம் மீள்காலமது
கானலாகிப் போயிற்றே
வலியோடும் விழிகண்ணீரோடும்
நீங்களற்ற வாழ்வில்
தினம் தினம் வெந்து வேகின்றோம்
பொழுதும் விடியுதில்லை….
ஊனும் இறங்கவில்லை…..
தினம் நூறுமுறை அழைக்கின்றோம்…
மீண்டும் எழுந்து வருவாயோ…
திக்கற்ற வழியிடையே
தெய்வமாய் வந்திடுக
உங்களையன்றி அகிலமதில்
யாருண்டு எங்களுக்கு?
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.