மாமி். ………….. உதட்டளவில் உறவுகள் இருக்கும் யுகத்தில் உரிமையாய் ‘’ஆச்சி’’,‘பிள்ளை’ என அன்பாக அழைத்திட்ட குரலும் அடங்கிவிட்டதா!! தொலைவில் இருந்தாலும தொடர்பில்தானே இருந்தீர்கள்…..அந்த அழைப்பும் இனி இல்லயா??? சந்தோஷமாக இரு ஆச்சி என்று இனி யார் சொல்வார்கள்?? அம்மா இருக்கும் வரை, கடைசி வரை‘அண்ணி’ என்று நீங்கள் கதைத்து கண்ணீராய் எம்மிடம் அப்பாவைப் பற்றி நீங்கள் பகிர்ந்த நினைவுகள் பல… பல பார்க்க வருகிறேன் என்ற போது நீங்கள் காட்டிய உற்சாகம் … காலம் வழிவிடவில்லை எமது கண்ணீர், சின்னண்ணையின் பிள்ளகளின் கண்ணீரை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம். எமது துயரத்தை தர்ஷன், ராசாத்தியுடன் பகிர்ந்தகொள்கிறோம். எங்கிருந்தாலும் உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைக்க வேணும் மாமி உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். சுபி-சுரேஸ் ஜேர்மனி
அவர் ஒரு நல்ல ஆன்மா ஆசிரியர், நல்ல மனிதர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர் அவர் இந்த உலகை விட்டுச் சென்றதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருவரின் வாழ்க்கை அவ்வளவுதான். எனது ஆழ்ந்த இரங்கல்கள்...