Clicky

பிறப்பு 02 NOV 1931
இறப்பு 28 JUL 2021
அமரர் செல்வதுரை சிவம் கணேசானந்தன்
வயது 89
அமரர் செல்வதுரை சிவம் கணேசானந்தன் 1931 - 2021 கல்லடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selvadurai Sivam Ganeshanandan
1931 - 2021

எங்கள் இதய தெய்வம் மாமாவுக்கு என் இதய அஞ்சலி!......... பிரித்தானியாவில் நீங்கள் -வாழ்ந்தாலும் மாமா! பிரித்தாள முடியாத எங்கள் -உறவல்லோ மாமா!சிரித்தாளும் பக்குவம் -நிறைந்தவர் நீங்கள் மாமா எரித்தாலும் மாறுமோ நம் -உறவு மாமா!-தலை விரித்தாடும்"கொரோனா" -உலகு இது வேண்டாம் என்றோ எமை விட்டு ஓடி -மறைந்தீர்கள் மாமா? சிரியாத உங்கள் வதனம் -எப்போதும்கண்டதில்லை! -மாமியை விட்டு பிரியாத பொழுதையும் -நாம் பார்த்ததில்லை! கரியாத கனிவான உங்கள் -குணம்! -என்றும் சரியாத உங்கள் இல்லற -வாழ்வு! வியந்து நின்றோமே மாமா! புரியாத புதிராக இன்று - புது உலகம் சென்றது ஏனோ மாமா? இறுதியாக26ம்திகதி -உங்களைப் பார்த்தோம்! அறுதியாகி விட்டது என் -வாழ்வு என்று அறிந்தோ அட்டகாசமாய் -சிரித்து மகிழ்ந்தீர்கள்! உறுதியாகிவிட்ட உங்கள் -பயணம் அறிந்தும் நீங்கள், பொறுதி காத்து சிரித்து - சிரித்து சிறுபிள்ளைபோல் -இருந்தீர்கள்! மறதிதான் மருந்தென்பார், மறக்கமுடியுமா மாமா? மகராசன் உங்கள் -இழப்பை எம்மால்........... மாண்டவர் மீண்டதில்லை -மண்ணிலே மாமா! ஏண்டவரை தொழுது -வேண்டுகிறேன்! ஆண்டவரை என் மாமா ஆத்மா சேர்ந்திடவே! ஓம் சாந்தி சாந்தி சாந்தி! உங்கள் பிரிவால் துயருறும்.... உங்கள் அன்பு மருமகள் *சுஜித்ரா* கல்லடி -மட்டக்களப்பு.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 29 Jul, 2021