யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகி பாலேந்திரா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
இன்றோடு 31 நாட்கள்
அவணியிலே நீங்கள் இல்லை
நினைக்கையில் வியக்கின்றேன்
நிஜமாய் நான் வாழ்ந்தேனா?
நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கின்றீர் !
அன்பாய் அம்மா என்று
அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லையம்மா
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK மற்றும் ஏனைய தொடர்பாடல் வழி மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 18-01-2023 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
மேலும்
29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் "மதிய போசன" நிகழ்வும், அன்னாரின் "நினைவு மலர்" வெளியீடும் கீழ்வரும் விலாசத்தில் நடைபெறும்.
இத்தருணம் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொண்டு எமது தாயாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு அன்புடனும் நன்றியுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
Date - 29th January 2023 (Sunday)
Time - 12.30 pm to 3.30 pm
Venue - Harrow Borough Football Club, Earlsmead, Carlyon Avenue, South Harrow, HA2 8SS.
Thinking of you and wishing you moments of peace and comfort as you remember your mother who was so close to you all With deepest sympathy