கலங்கரை விளக்கமென கரைசேர்த்தாய் உன்னவரை அலங்கரித்து அழகுபார்த்து உளம் பூரித்து மகிழ்வுற்றாய் கலங்காது காத்திருந்த செல்வங்களைக் குலம்விளங்க கலகலப்பாய் வைத்திருந்தாய் விட்டுத்தான் சென்றதேனோ? இறுமாப்பாய் இருப்பினிலே சத்தியபாமா என்நாளும் இறுகத்தான் பற்றி நின்று பிள்ளைப் பேறுகளாம் துறைபோகக் கல்வியறிவூட்டி தந்தை மகற்காற்றும் குறைவில்லா உதவிசெய்தவனே சென்றனையோ! இன்முகமாய் என்றென்றும் இன்பமாய் வைத்திருந்தாய் இன்பப்புதையல் எங்கள் அப்பாஎன ஏங்கித் தவித்து இன்னலுற்று அழுகின்றார் உன்னுதிரத்து உதித்தோர் இன்னல் ஏதும் வையாது உடல்பிரிந்து சென்றனையோ! அப்பா எனஏங்க அனுசியா, யாழினி, சத்தியயோகியுடன் தப்பாது உன்னோடு செல்லம் பொழிந்திருந்த சரோஜினி எப்போதும் இன்போடு சரோஜினி, பிரசாந்தி துயருற இப்போதும் தேடிவரும் இந்திரகுமார் ஏங்கச்சென்றனையோ? அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் எனவொழுகி இன்பமொழி பேசியிணைந் திருந்த கடைக்குட்டி யசோதா துன்பம் பெருக்கிவர துயருற்று கண்ணீர் வடித்துத் துன்பவெள்ளத்தில் தேம்பியழ புவிவிட்டுச் சென்றதேன்? உலகறிந்த மாங்குளம் விதானையார் வரமாக கைலேஸ்வரி நலமுறவே அரிராசபிள்;ளை, அருளம்மா, சிவனேசமணி பலமெனச் பாலசிங்கம், சிவானந்தராசா, ஜெயானந்தராசா வலமாக குகானந்தராசா, நித்தியானந்தராசா உடன்பிறப்பே! திருமணத்தில் இணைத்துவைத்து பற்பலரும் மகிழ்வடைய திருவாக நீயிருந்தாய் தித்திக்கும் உன்பேச்சினிலே உருகிநின்றோம் உரிமையொடு பழகிவந்த யோகண்ணா மருவிநீ இறைபாதம் சென்றவரே அமைதிகொள் அன்பரே!
உங்களுக்கு என் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபம் மற்றும் உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி சாந்தி..