1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லையா செல்வேந்திரன்
வயது 66

அமரர் செல்லையா செல்வேந்திரன்
1956 -
2023
துன்னாலை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 25-12-2023
யாழ். துன்னாலை மேற்கு ஞானாசாரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், வவுனியா புளியங்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா செல்வேந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே!
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்